பாரிசவாதம்  பொதுமக்களுக்கான ஓர் வழிகாட்டி

பாரிசவாதம் பொதுமக்களுக்கான ஓர் வழிகாட்டி

500.00 LKR In stock Buy at Merchant

பாரிசவாதம் என்பது முக்கியமானதொரு தொற்றா நோயாக காணப்படுவதுடன் உலகளாவிய ரீதியில் மரணத்தை தோற்றுவிப்பதில் இரண்டாவது காரணமாகவும் காணப்படுகின்றது. இதற்கு அதிகரித்து வரும் கொலஸ்திரோல், நீரிழிவு, உயர்குருதியமுக்கம், அதிகரித்த நகரமயமாதல், தவறான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், மது, புகை மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற பல்வேறு காரணிகள் மூலகாரணமாக அமைகின்றன. பாரிசவாதமானது மரணத்தைத் தாண்டி நிரந்தர அங்கவீனங்களை ஏற்படுத்தி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை பெரிதளவில் பாதிக்கின்றது. அதனடிப்படையில் பாரிசவாதம் பற்றிய பொதுமக்களுக்கான ஓர் வழிகாட்டி நூலில் பாரிசவாதம் பற்றிய விளக்கங்கள், பாரிசவாதம் நோயின் வகைகள், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், பாரிசவாதத்தின் அறிகுறிகள், பாரிசவாதத்தின் பொதுவான மற்றும் மருத்துவ முகாமைத்துவம் போன்ற அரிய தகவல்களை பற்றி பொது மக்களுக்கு எழுதுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

AI Readiness

Good foundation, but some important product data is still missing.

74%