இலங்கையின் பொருளாதார நெருக்கடி: 2021/2022
இது இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடி பற்றி, பரந்துபட்ட சமூக மற்றும் அரசியல் பார்வையோடு விரிந்து நோக்கும் ஒரு நூல். தமிழில் இலங்கையின் சமகாலப் பொருளாதாரம் பற்றிப் பேசும் ஆய்வுகளுக்கு அருமை நிலவும் நிலையில் இந்நூலின் வருகை இலங்கைப் பொருளாதாரத்தை விமர்சன ரீதியில் வாசிக்க விரும்பும் எவருக்கும் அருந்துணையாய் அமையும். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நடுவில் விடுபட்டுப்போன அல்லது ஆய்வாளர்களால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட இலங்கையில் இனமுரண்பாட்டின் பொருளாதாரத்தாக்கம் பற்றிய ஆய்வினைச் செய்கின்றன. எனவேதான் இந்நூல் ஏனையவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதற்பகுதி ஒன்பது அத்தியாயங்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொள்கிறது. ஒன்பது அத்தி யாயங்கள் கொண்ட இரண்டாம் பகுதி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான மூலாதாரங்கள் குறித்து அலசுகின்றது. மூன்றாவது பகுதி பொருளாதார நெருக்கடியின் மீட்சிக்கான வழிமுறைபற்றி ஆராய்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்து நிலைத் திருக்கக் கூடிய விதமாக அறிமுகம் தொடக்கம் முடிவுரைகளோடு உசாத்துணைகளையும் கொண்டிருப்பது சிறப்பு.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.