PALLU & FRIENDS/பல்லு &ஃபிரண்ட்ஸ்
டூ இன் ஒன் ஸ்டோரி! பல்லவி... ஓர் அழகான மலைக்கிராமத்தில் வாழும் சிறுமி. அவளுக்குக் கதை எழுதத் தெரியும். ஓவியம் வரையத் தெரியும். எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பழகவும் தெரியும். ஒருமுறை பல்லவியின் தேர்வு நேரத்தில் உறவினர் திருமணத்துக்காக அப்பாவும் அம்மாவும் ஊருக்குச் செல்லவேண்டிய நிலை. அதனால், வீட்டில் இரவு தனியாக இருக்கிறாள் பல்லவி. அந்த இரவில் அதிசயம் நிகழ்கிறது. அவளைத் தேடிச் சில நண்பர்கள் வருகிறார்கள். யார் அவர்கள்? என்ன அதிசயம்? இது ஒரு டூ இன் ஒன் ஸ்டோரி! ஆமாம்! 12 அத்தியாயங்களுடன் கலகலப்பான நாவலும் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயம் இறுதியிலும் ஒரு சிறுகதையும் இருக்கிறது. அந்தச் சிறுகதைகளுக்கும் பல்லவிக்கும் ஆச்சர்யமான தொடர்பும் இருக்கிறது. அது என்னவெனப் பார்க்கலாமா ஃப்ரண்ட்ஸ்?
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.