Isai Tamil Varalatril Arimalam Padmanabhan/இசைத் தமிழ் வரலாற்றில் அரிமளம் பத்மநாபன்
தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் கட்டிக்காத்து வந்த முத்தமிழ் என்னும் கருத்தாக்கம் மறைந்து வருகின்றது. இதனால் ஏற்படப்போகும் பண்பாட்டு இழப்பைச் சுட்டிக்காட்டும் குரல்களில் ஒன்றாக எழுந்திருப்பது தான் அரிமளம் பத்மநாபனின் குரல். இந்த நூல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கர்நாடக இசை பற்றிய ஒரு மதிப்பீடாக அமைகிறது. ஆனால் அந்த இசை வகையின் உன்னதத்தை மறுக்கவோ, மறைக்கவோ முயற்சி செய்யவில்லை. அந்தக் குரல் பன்முகப்பட்ட குரலாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இசைத் தமிழ் வரலாறு இந்திய இசையின் பல கூறுகளை உட்கொண்டு அதன் ஆதி மூலமாக இருக்கிறது. ஒட்டு மொத்தத் தமிழ் இலக்கியத்தையும் இசை நோக்கில் பார்க்க முடியும், பாட முடியும் என்று பத்மநாபன் நிறுவியிருக்கிறார். தற்போதைய தமிழக அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழல் அரிமளம் பத்மநாபன் போன்றவர்களைச் சீந்துவதில்லை. ஆனால் தாங்கள் வாழும் காலத்தில் சீந்தப் படாதவர்களைத்தான் வரலாறு கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.