Tholkaappiyathil Indraiya Isai Ilakkanam/தொல்காப்பியத்தில் இன்றைய இசை இலக்கணம்
நூலாசிரியர் “பரிமளத் தமிழின் தேர்ச்சி, பனிமலர் இசையின் மாட்சி அரிமளப் பதுமநாபன் ஆற்றலின் அரிய சாட்சி” - கவிஞர் ஈரோடு தமிழன்பன் அருந்தமிழ் இசை மாமேதை அரிமளம் பத்மநாபன் திருந்திய சொல்லில் வல்லான் திசைகளை இசையால் வென்றான் பொருந்திய செம்மொழிச் சீர்ப் புகழ்ச் சங்கப் பாடலுக்குள் விருந்துணும் வண்டு போல்வான்: விரிதமிழ்ப் புலமை மிக்கான். - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் * * * நூல் இன்றைக்கு வழக்கில் இருந்துவரும் கர்நாடக இசை என்னும் தென்னிந்திய செவ்விசை, இந்துஸ்தானி இசை, தமிழ்த் திருமுறை இசை, நாட்டுப்புற இசை, நாட்டிய, நாடக இசை என அனைத்து இசை வகைகளுக்குமான மூல வேர்களைத் தொல்காப்பியத்தில் அடையாளப்படுத்துகிறது இந்நூல். தொல்காப்பியம் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள ஞானப் புதையல்; அறிவுச் சுரங்கம். இதில் உள்ள நூற்பாக்கள் பலவும் தமிழகம், பாரதம் எனும் எல்லைகளையும் கடந்து உலக சமுதாயத்தின் இசை, நாகரிகம், பண்பாடு (Universal Culture) என்னும் வாழ்வியலுக்கும் தொடர்புடையவை. தொல்காப்பியத்தின் உலகளாவிய பார்வையையும் இந் நூல் அடையாளம் காட்டுகிறது.
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.