NAARAI NAARAI/நாராய் நாராய்
நகரசபைத் தலைவரும் உறுப்பினர்களும் தங்கவேலு அய்யங்காரை நேரில் வந்து வேண்ட வந்திருந்தார்கள். அதில் ஒரு மெம்பரின் வாயைத் துணி வைத்து அடைத்திருந்தது, அவன் முனிசிபாலிட்டி மீட்டிங்கில் கேட்டானாம் – ‘ஆப்பிரிக்க வெனிஸ் என்று நம் வலனாடு-வுக்கு பட்டம் தர என்ன அடிப்படை? நான் வெனீஸ் நகருக்கு டூரிஸ்ட் ஆகப் போயிருக்கிறேன். அங்கே கட்டடங்கள் எல்லாம், தெருக்கள் அனைத்தும் தண்ணீரிலேயே அமைத்திருக்கும். கோண்டோலாக்கள் என்ற படகுகளை தெருக்களூடே ஓட்டியே போக்குவரத்து நடக்கும். நடக்காது. மிதக்கும்’ என்றும், இன்னும் பிறவும் பிதற்றினானாம். யார்ரா இவன் ஆரம்பிக்கும்போதே அஸ்து கொட்டறான். வலனாட்டுலே கால் கழுவத் தண்ணி இல்லே. வெனிஸ் எப்படி ஆகும்னு கேட்கிறான் தேசத்துரோகி. அத்தனை மெம்பர்களும் சேர்ந்து தேசத்துரோகி தேசத்துரோகி என்று ஒரே குரலாக உயர்த்தினர்.
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.