சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாடுகள்
சர்வதேச உறவுகள் பற்றிய பிரதான கோட்பாடுகளான இயல்புவாதம், பன்மை வாதம், அமைப்பியல்வாதம் என்னும் மூன்று கோட்பாடுகளை விளக்கும் வகையில் அமையும் எட்டுக் கட்டுரைகளைக் கொண்டதாக விளங்கும் இச்சிறு நூல் சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாட்டு அடிப்படையிலான புரிதலுக்கு உதவுகிறது. மேற்கண்ட இக்கோட்பாடுகளின் நோக்குநிலையில் விருத்தியும் குறைவிருத்தியும், தேசிய அரசுகளின் முறைமை, அதிகாரச் சமநிலை, போரும் சமாதானமும் ஆகிய விடயங்களும் இக்கட்டுரைகளில் பகுப்பாய்வு செய்யப் பட்டுள்ளது. சர்வதேச உறவுகளைக் கோட்பாடுகளின் பின்னணியில் புரிந்து கொள்ளுதல் பயன் தருவது. இலங்கைத் தமிழர் வாழ்வும் எதிர்காலமும் சர்வதேசம் சார் உறவுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்ற உணர்வு கற்றவர்களிடை மட்டுமல்லாது சாதாரண மக்களின் மனத்திலும் இன்றுள்ளது. இப்பின்னணியில் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் எமது சிந்தனைக்குத் தூண்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.