இலங்கையின் வெளியுறவுக் கொள்கை
இந்நூல் வரலாற்று நோக்கை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் வரலாற்று முகத்தினை படம்பிடித்துக் காட்டினாலும் அது ஓர் அரசியல் வரலாற்று ஆய்வாகவே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து பிரதான அத்தியாயங்களைக் கொண்டதாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் வரலாற்றின் முதன்மையை நிலைப்படுத்தியிருப்பதுடன் அக்காலகட்டத்தில் ஆட்சிபுரிந்த தலைமையையும் அரசாங்கத்தை அமைத்த கட்சியையும் சார்புநிலைக் காரணியாகக் கொண்டுள்ளது. இந்நூலிலுள்ள அத்தியாயங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முனைப் புக்களை வெளிப்படுத்தியிருப்பதுடன் சமகாலப்போக்கினை ஆய்வு செய்துள்ளன. இந்நூல் வரலாற்றை அப்படியே ஒப்புவிக்காது தர்க்கத்தையும், விமர்சனத்தையும், அவற்றின் தேவை கருதி வெளிப்படுத்தியுள்ளது. பின்வரும் அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது: 1. வெளியுறவுக் கொள்கை: ஓர் அறிமுகம், 2. சுதந்திரத்தின் பின் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை (1948 – 1977), 3. திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை (1977 1986 வரையான காலம்), 4. புதிய உலக ஒழுங்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் (1989 – 2002), 5. சமாதானப் பேச்சு வார்த்தையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் (2002 – 2010).
AI Readiness
Good foundation, but some important product data is still missing.