நான் சராசரிப் பெண் அல்ல
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள சட்டிக்கிணறு (ஏ) எஸ்.திருவேங்கிடபுரம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ராஜபாளையத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, கிருஷ்ணன்கோவில் அருகிலுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று கணினிப் பயன்பாட்டியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பெண் மனத்தின் நுண்ணிய உணர்வுகளையும் வாழ்க்கையின் மென்மையான தருணங்களையும் எளிய, பாவமிகு மொழியில் கவிதையாக்கும் இவர், மெல்லப் பேசும் வலிமையுடன் வாசகனின் மனதில் நீண்ட நேரம் தங்கும் கவிதைகளை வழங்குகிறார். ‘நான் சராசரிப் பெண் அல்ல’ இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.
72%