சிசு
குழந்தைகளின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு எல்லைகள் என்று ஏதுமில்லை. உலகின் அத்தனை நாடுகளிலும், சமூகத்தின் அத்தனை அடுக்குகளிலும் இத்தகைய அத்துமீறல்கள் நிகழவே செய்கின்றன. பெரும்பாலான சமயங்களில், குழந்தைகளுக்கு மிக நெருக்கமான உறவுகளாலேயே இதுபோன்ற அத்துமீறல்கள் நிகழ்கின்றன என்பதுதான் நம்மை அதிரடிக்கிறது. இந்த அத்துமீறல்களை எதிர்கொள்ளும் குழந்தைகளின் உடலும் அதை மீறி மனமும் என்னவாகும் என்ற கேள்விக்கு விடைகாண முயற்சிக்கிறது பிரதீபாவின், ‘சிசு’ தன்னுடைய முதல் நாவலிலேயே மிகவும் அடர்த்தியான ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு வெகு இயல்பான கதையாடலின் வழியே ஓர் அதிர்ச்சியூட்டும் வாழ்வை அவர் நம்மிடம் முன்வைக்கிறார். அதனூடாக சமூகத்தின் மனசாட்சியை சற்றே அசைத்துப் பார்க்கவும் முயல்கிறார். பேசாப்பொருளைப் பேசுவதற்கு பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் நம்மை நாமே பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளும் ஓர் உளவியல் சாட்சியமாக விளங்குகிறது இந்நாவல்.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.