இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்
உலக நாடுகளின் பெரும் கவன ஈர்ப்பிற்குள்ளாகியுள்ளதொரு நாடாக இலங்கையுள்ளது. கடல்வழித்தொடர்பாடலில் எதிர்காலத்தில் இலங்கை வகிக்கக்கூடிய வகிபாகம் மிகவும் காத்திரமானதாகும். கடல்வழித் தொடர்பாடலில் முன்னிலைக்கு வருவதற்கு முயற்சிக்கும் ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்துவதனூடாக இலங்கையினைத் தமது செல்வாக்கிற்குட்பட்ட நாடாக வைத்திருக்க முயற்சிசெய்கின்றன. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளைச் சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலகநாடுகளும் இலங்கை யினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக் கின்றன. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தந்திரோபாயப் பங்காளர்களாக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினை தம்நலன்சார்ந்து இலங்கையுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளனர். இச்சூழ்நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.