கடக்க முடியாத தொலைவு:  உடல் | பெண் | தலித்

கடக்க முடியாத தொலைவு: உடல் | பெண் | தலித்

Brand: Ethir Veliyeedu
540.00 INR In stock Buy at Merchant

தொல்காப்பியம் தொடங்கி நவீன இலக்கியம், சமகால அரசியல் என முப்பகுதிகளாகப் பகுக்கும் வகையில் பெருந்தொகுப்பாக விரிந்திருக்கிறது இந்நூல். கட்டுரைகளுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் கட்டுரைகளில் காணும் அடிக்குறிப்புகளும் துணைநூற்பட்டியலும் ஒரு தமிழாசிரியரின் விரிவான வாசிப்பைக் காட்டுகின்றன. தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் அவர் கொண்டிருக்கும் பரந்த வாசிப்பே முதலில் வியப்பூட்டியது. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கிச் சமகாலம் வரை எல்லாவற்றிலும் பெண்ணியப் பார்வை ஊடாடிச் செல்கிறது. அப்பார்வையைப் பிரயோகிக்க ஆதாரத் தரவுகள் தேவை. அவற்றைக் கண்டடைய வாசிப்பும் புலமையும் வேண்டும். இவையெல்லாம் கூடி அமைந்த ஆய்வுக் கட்டுரைகள் இவை. தம் நீண்ட ஆசிரியர் பணிக்காலத்தில் பெற்ற பழந்தமிழ் இலக்கிய அறிவையும் சமகால அரசியல் கோட்பாடுகளையும் கொண்டு இந்நூல் கட்டுரைகளை எழுதியுள்ளார். - பெருமாள்முருகன் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணியிலும் தமிழ்ப்பணியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட முன்னாள் கல்லூரி முதல்வர் முனைவர் ப.பத்மினி அவர்களின் இந்த முப்பத்தியெட்டுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான அறிவுப் பதிவாகும். சங்க இலக்கியம் தொடங்கி சமகால நாவல்கள் வரை மிக நீண்டதொரு காலப்பரப்பைத் தனது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள ஆசிரியர், செவ்வியல் இலக்கியங்களை வெறும் இரசனை சார்ந்து மட்டும் அணுகாமல் அவற்றின் சமூகப் பின்னணியையும் அறக்கோட்பாடுகளையும் பெண்கள் நிலையையும் மிக மிக நுட்பமாக ஆராய்கிறார். தனது நீண்டகால நிர்வாக அனுபவத்தையும் தமிழ்ப் புலமையையும் இணைத்து மிக எளிய நடையில் அதேசமயம் ஆழமான கருத்துகளுடன் இவர் வழங்கியுள்ள இந்த நூல் ஆய்வாளர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. - ப. சிவகாமி Author: ப. பத்மினி Genre: கட்டுரைகள் Language: தமிழ் Type: Hard Bound ISBN: 9789375770282

Variants (1)
  • Default Title — 540.00 INR — In stock

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

80%