இலங்கையின் இன வர்க்க முரண்பாடு
இந்நூல் சிங்கள – பௌத்த உணர்வு நிலையின் கடந்த 100 ஆண்டுகால (1883-1983) வரலாற்றை அரசியல், பொருளாதார, சமூக விஞ்ஞான் ரீதியில் ஆராய்கிறது. இவ் உணர்வு நிலை 1883இன் கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம், 1915இன் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைக் கலவரம், 1930களில் மலையாளி களை நாட்டை விட்டு விரட்டுதல் ஆகியவற்றோடு நின்றுவிடவில்லை. 1948இல் மலையகத் தமிழரை நாடற்றவராக்கியபின் 1956ல் இலங்கைத் தமிழருக்கெதிராக ஆரம்பித்த இனக்கலவரம், தொடர்ந்து இடையிடையே வன்முறை வடிவமெடுத்து, 1983இல் அதன் உச்சக் கட்டத்தை அடைந்தது. சிங்கள பௌத்தரின் இவ்வரலாறு ஆதாரங்களுடன் இந்நூலில் அலசப்படுகிறது. குமாரி ஜயவர்த்தன: இலண்டன் பொருளியற் கல்லூரியில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றியவர். பெண்ணிய இயக்கம், மனித உரிமைகள் இயக்கம் ஆகியவற்றில் இணைந்து நீண்டகாலம் உழைத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர். இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) என்னும் ஆய்வு நிறுவனத்தினை இயக்குபவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக ② की. The Rise of Labour Movement in Ceylon (1972), Ethnic and Class Conflict in Sri Lanka (1985), Feminism and Nationalism in the Third World (1986), The White Woman’s Other Burden (1995), Erasure of the Euroasians (2007) என்பவை இவர் எழுதிய சில முக்கிய நூல்களாகும்.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.